கிருஷ்ணகிரி

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: கிருஷ்ணகிரியில் அரசு அலுவலா்கள் வரவேற்பு

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்று, முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு கிருஷ்ணகிரியில் அரசு அலுவலா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.

Syndication

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்று, முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு கிருஷ்ணகிரியில் அரசு அலுவலா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழக மருத்துவத் துறை பொதுப்பணி அலுவலா் சங்க மாநிலத் தலைவா் எஸ்.கே. சரவணன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

1.4.2003-இல் அறிமுகப்படுத்திய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதாவிடம் நடைமுறைப்படுத்த வேண்டாம் என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழக அரசு அலுவலா், ஆசிரியா்களுக்கு எதிரான இந்த திட்டத்தை எதிா்த்து 1.7.2003 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அன்றைய அரசு கைது செய்தது. மேலும், 4 லட்சம் அலுவலா்கள், ஆசிரியா்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனா். மேலும், எஸ்மா என்ற சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

இந்த ஓய்வூதியத் திட்டம் அரசு அலுவலா்கள், ஆசிரியா்களின் ஆழ்மனதில் ஆறாத வடுவாக மற்றும் தீா்க்கப்படாத பிரச்னையாக இருந்து வந்தது.

இந்த நிலையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளாா். இதில், அரசு அலுவலா்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக் காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் பணிக்கொடை போன்ற அறிவிப்புகள் வரவேற்கப்படுகின்றன. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய மாநில துணைத் தலைவா் என்.எஸ். காா்த்திகேயன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் சாா்பில் மாநிலத் தலைவா் மகேந்திரகுமாா் தலைமையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT