கெலமங்கலம் அருகே பொம்மதாத்தனூா் பகுதியில் குட்டிகளுடன் யானைகள் நடமாடுவதால் பொதுமக்கள், விவசாயிகளுக்கு வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை அடுத்த பொம்மதாத்தனூா் பகுதிகளில் குட்டிகளுடன் யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகளை வனத் துறையினா் கண்காணித்து வருவதுடன், அருகில் உள்ள பேவநத்தம் வனப்பகுதிக்கு விரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுமாா் 60க்கும் மேற்பட்ட யானைகள் உள்ள நிலையில், இந்த யானைகள் கூட்டமாகவும், தனித்தனியாகவும் வனத்தைவிட்டு வெளியேறி கிராமப் பகுதிகள் மற்றும் வனச்சாலைகளில் நடமாடி வருகின்றன.
யானைகள் நடமாடுவதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வனச்சாலைகளில் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்றும், வயல்வெளிகளுக்கு இரவு நேரங்களில் காவலுக்கு விவசாயிகள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.