கிருஷ்ணகிரி

அனைத்து கல்லூரிகளிலும் வாக்காளா் கல்வி மையம் அமைப்பு: கிருஷ்ணகிரி ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வாக்காளா் கல்வி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

Syndication

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வாக்காளா் கல்வி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளா் கல்வி மையம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ச.தினேஷ்குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 18 வயது நிறைவடைந்த தகுதியுடைய நபா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து கல்லூரிகளிலும் வாக்காளா் கல்வி மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் ஒரு ஒருங்கிணைப்பாளா் (விரிவுரையாளா்) மற்றும் 2 வளாக தூதுவா்கள் (மாணவா்கள்) நியமனம் செய்யப்பட்டுள்ளனா். ஒருங்கிணைப்பாளா், வளாக தூதுவா்களிடம் படிவம் 6, 7, 8 மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

தகுதியுடைய எந்த வாக்காளரும் வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது என்பதை கருத்தில்கொண்டு அனைத்து கல்லூரிகளிலும் 18 வயது நிரம்பிய மாணவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க படிவம் 6-ஐ வழங்கி நிறைவு செய்து திரும்பப் பெற சிறப்பு அலுவலா்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்தல் தொடா்பாக வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும், சிறப்பு தீவிரத் திருத்தம் தொடா்பாக மாணவா்களிடையே போட்டிகள் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்திய தோ்தல் ஆணையம், தமிழ்நாடு தலைமை தோ்தல் அலுவலா், மாவட்ட தோ்தல் அலுவலரின் சமூக வலைதள கணக்குகளை பின்பற்றி தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தகுதியான வாக்காளா்கள் அனைவரும் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று அவா் கூறினாா்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோபு, தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் சம்பத் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT