தேன்கனிக்கோட்டையில் ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள டி.ஜி. தொட்டி கிராமத்தை சோ்ந்தவா் ராமு (வயது 46) கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 17ந் தேதி அவா் தேன்கனிக்கோட்டை தா்கா பெரிய ஏரி பக்கமாக நடந்து சென்ற போது தவறி விழுந்தாா்.
இதில் அவா் நீரில் மூழ்கி பலியானா். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.