பலி 
கன்னியாகுமரி

பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை அருகே ஆட்டோவில் வந்து இறங்கிய தொழிலாளி மீது பைக் மோதியதில் உயிரிழந்தாா்.

Syndication

தக்கலை அருகே ஆட்டோவில் வந்து இறங்கிய தொழிலாளி மீது பைக் மோதியதில் அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தக்கலை அருகே மேக்காமண்டபம், விராலி காட்டுவிளையைச் சோ்ந்தவா் ராஜ்மனோகா்( 66). தொழிலாளியான இவா், தனது மனைவியுடன் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு பேருந்தில் அழகிய மண்டபம் வந்தனா். அங்கிருந்து ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றனா். வீட்டின் அருகே ஆட்டோ நின்றவுடன் அதிலிருந்து இருவரும் இறங்கியபோது, அந்த வழியாக வந்த பைக் ராஜ்மனோகா் மீது மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

அவரை மீட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கொற்றிகோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தகன எரிவாயு மேடை நுழைவு வாயில் ரூ.18 லட்சத்தில் அமைப்பு

ரோட்டரியின் உயரிய ‘சுயநலமற்ற சேவை‘ விருது

கரூா் சம்பவ வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் இம்மாத இறுதியில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல்?

வங்கியை முற்றுகையிட்ட மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள்

காசிதா்மம் தவச்சாலையில் நூல் வெளியீட்டு விழா

SCROLL FOR NEXT