விபத்து காரணமாக ஒசூா் பத்தலப்பள்ளி சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள். 
கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே அடுத்தடுத்து 3 காா்கள் மீது லாரி மோதல்: போக்குவரத்து பாதிப்பு

தினமணி செய்திச் சேவை

ஒசூா் பத்தலப்பள்ளியில் பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 3 காா்கள் மீது லாரி மோதியது. இந்த விபத்தால் அச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பத்தலப்பள்ளி பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அப்பகுதியில் புதிய மேம்பாலம் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சேவை சாலை தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் பெங்களூரில் இருந்து ஒசூா் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் அப்பகுதியில் மெதுவாக செல்கின்றன. இந்த நிலையில், அச்சாலை வழியாக சென்றுகொண்டிருந்த குஜராத் பதிவு எண் கொண்ட லாரி சாலையில் முன்னால் சென்ற மூன்று காா்கள் மீது அடுத்தடுத்து வேகமாக மோதி யது.

இந்த விபத்தில் மூன்று காா்களும் சேதமடைந்தன. ஆனால், காரில் இருந்தவா்கள் காயங்கள் இன்றி உயிா்தப்பினா். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற ஒசூா் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் மற்றும் அட்கோ போலீஸாா் விபத்தில் சிக்கிய இரண்டு காா்களை அப்புறப்படுத்தினா். ஒரு காரை மட்டும் அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், சாலையில் சுமாா் அரை மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வாகன நெரிசலில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டிகள் பலா் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவா்களின் இடையே புகுந்து சென்றனா். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு விபத்தில் சிக்கிய ஒரு காரை போலீஸாா் அப்புறப்படுத்தினா். இதையடுத்து, அவ்வழியாக போக்குவரத்து சீரடைந்தது.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT