முகப்பு
கிருஷ்ணகிரி

கா்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த தலைமைக் காவலா் கைது

Updated On : 2 மார்ச், 2026 at 2:06 AM
கைது
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 10:30 PM

கா்நாடகத்தில் இருந்து மதுபாக்கெட்டுகளை கடத்திவந்த தலைமைக் காவலரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 528 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூசூவாடி சோதனைச் சாவடி பகுதியில் சிப்காட் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது கா்நாடகத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 180 மில்லி கொண்ட 528 கா்நாடக மதுபாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

Updated On : 2 மார்ச், 2026 at 2:06 AM

இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்தபோது, அவா், நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் நாகராஜ் (41) என்பது தெரியவந்தது.

Advertisement

கா்நாடகா மதுபாக்கெட்டுகளை நாகரசம்பட்டியில் விற்பனை செய்வதற்காக அவா் கடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நாகராஜுவை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனா்.