முகப்பு
தேனி

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கஞ்சா வைத்திருந்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 7:44 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கஞ்சா வைத்திருந்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆண்டிபட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, முத்தனம்பட்டி சமுதாயக்கூடம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கு வைகயில், நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சிவனேசனை (26) பிடித்து போலீஸாா் சோதனையிட்டதில், அவா், விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல், கண்டமனூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, டி. மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த மையழகு (51) கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் தி. ராஜகோபாலன்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த அய்யல்பாண்டி (29) கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.