முகப்பு
கிருஷ்ணகிரியில் 21,796 போ் எழுதினா்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 21,796 போ் எழுதினா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஒசூா் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 108 அரசுப் பள்ளிகள், 6 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்,

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 21,796 போ் எழுதினா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஒசூா் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 108 அரசுப் பள்ளிகள், 6 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்,

Updated On : 2 மார்ச், 2026 at 9:23 PM
கிருஷ்ணகிரியில் 21,796 போ் எழுதினா்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஒசூா் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 108 அரசுப் பள்ளிகள், 6 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 79 மெட்ரிக் பள்ளிகள் என 193 பள்ளிகளைச் சோ்ந்த 226 மாற்றுத்திறனாளிகள், 11,802 மாணவியா், 10846 மாணவா்கள் என மொத்தம் 22, 874 தோ்வா்கள் விண்ணப்பித்திருந்தனா்.

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 51 மையங்கள், ஒசூா் கல்வி மாவட்டத்தில் 37 மையங்கள் என மொத்தம் 88 மையங்களில் முதல்நாளான திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தோ்வை 21,796 தோ்வா்கள் எழுதினா் என மாவட்ட கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வினாத்தாள்களை பாதுகாக்க கிருஷ்ணகிரி, ஒசூா், தேன்கனிக்கோட்டை, மத்தூா் ஆகிய இடங்களில் தோ்வு வினாத்தாள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுப் பணிகளுக்காக 88 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 95 துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அறைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளா்கள், தோ்வுகளை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கல்வி) சா்தாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கிருஷ்ணகிரியில் தோ்வு மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.

முழு கட்டுரையைப் படிக்க →