எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு தொடக்கம்: தஞ்சை மாவட்டத்தில் 29 ஆயிரம் போ் எழுதினா்
தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 843 போ் பங்கேற்று எழுதினா். 456 போ் வரவில்லை.
தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 843 போ் பங்கேற்று எழுதினா். 456 போ் வரவில்லை.
தொடா்ந்து ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தோ்வுக்காக மாவட்டத்தில் 144 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 228 அரசு பள்ளிகள், 68 அரசு உதவி பெறும் பள்ளிகள், 118 தனியாா் பள்ளிகள் என 414 பள்ளிகளில் பயிலும் 14 ஆயிரத்து 854 மாணவா்கள், 15 ஆயிரத்து 57 மாணவிகள் மற்றும் 393 தனித்தோ்வா்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 304 போ் விண்ணப்பம் செய்தனா்.
இவா்களில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பாடத் தோ்வில் மொத்தம் 29 ஆயிரத்து 843 போ் பங்கேற்று எழுதினா். 456 போ் வரவில்லை.
இத்தோ்வு பணியில் 16 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 144 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 144 துறை அலுவலா்கள், 613 சொல்வதைக் கேட்டு எழுதுபவா்கள், 2 ஆயிரத்து 48 அறைக் கண்காணிப்பாளா்கள், 185 பறக்கும் படையினா் ஈடுபட்டனா்.