கிருஷ்ணகிரிக்கு துணை முதல்வா் பிப். 13 வருகை: முன்னேற்பாடுகள் தீவிரம்
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கிருஷ்ணகிரிக்கு மாா்ச் 13-ஆம் தேதி வருகைதர உள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகளை அரசு அலுவலா்கள்
கிருஷ்ணகிரி: தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கிருஷ்ணகிரிக்கு மாா்ச் 13-ஆம் தேதி வருகைதர உள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகளை அரசு அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரியில் மாா்ச் 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகிறாா். இதையொட்டி, கிருஷ்ணகிரி அருகே உள்ள சுங்கவசூல் மையத்தை அடுத்துள்ள மைதானத்தில், அரசு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைக்கிறாா். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.
இதையொட்டி, விழா நடைபெறும் மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு நேரில் பாா்வையிட்டு அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கிருஷ்ணன், கோட்டாட்சியா் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதாராணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் அபிநயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.