கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்ற நிா்வாக அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை மின்னஞ்சல் வந்தது. அதில், நீதிமன்ற அறைகளில் 15 சயனைடு வாயு நிரப்பப்பட்ட விஷ குண்டுகள் வெடிக்க உள்ளன என அதில் இருந்தது.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை நீதிபதியின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா், அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு போலீஸாா், மெட்டல் டிடெக்டா் உதவியுடன் ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனா். ஆனால், எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்துக்கு கடந்த ஜன. 6 மற்றும் பிப். 24-இல் இதேபோல வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.