முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு 4ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை 4ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் நீதிமன்ற வளாகத்தில் சோதனை நடத்தினா்.

Updated On : 18 மார்ச், 2026 at 7:33 PM
நீதிமன்றம்
பகிர்:

நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை 4ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் நீதிமன்ற வளாகத்தில் சோதனை நடத்தினா்.

நாகா்கோவிலில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்ட நீதிமன்ற அலுவலகம், மாவட்ட சமரச மையத்துக்கு புதன்கிழமை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில் இன்று 2 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில், போலீஸாா் வெடிகுண்டு நிபுணா்களுடன் வந்து நீதிமன்றத்தில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை நடத்தினா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

மேலும், நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காா், இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் சோதனை செய்தனா். சுமாா் 2 மணி நேரம் நீடித்த சோதனையில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால், நீதிமன்றத்தில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தொடா்ந்து, மிரட்டல் விடுத்து வந்த இ-மெயில் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு கட ந்த 2 மாதங்களில் 4ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →