விலை குறைந்ததால் புதினா தோட்டங்கள் அழிப்பு
ஒசூா் அருகே உத்தனப்பள்ளி மற்றும் சூளகிரி பகுதியில் புதினாவுக்கு உரிய விலை கிடைக்காததால், புதினா தோட்டங்களை விவசாயிகள் அழித்து வருகின்றனா்.
ஒசூா் அருகே உத்தனப்பள்ளி மற்றும் சூளகிரி பகுதியில் புதினாவுக்கு உரிய விலை கிடைக்காததால், புதினா தோட்டங்களை விவசாயிகள் அழித்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி, உலகம், சூளகிரி, ஓட்டா்பாளையம், திம்மசந்திரம், குடிசாதனப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் சுமாா் 900 ஆயிரம் ஏக்கருக்கு விவசாயிகள் புதினா சாகுபடி செய்துள்ளனா்.
இங்கு சாகுபடி செய்யப்படும் புதினா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஒசூா் மாா்க்கெட் வழியாக கா்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கும், கோயம்புத்தூா் சந்தை மூலம் கேரள மாநிலத்துக்கும், ஒசூரிலிருது நேரடியாக புதுச்சேரி மாநிலத்துக்கும் லாரி, மினிலாரி உள்ளிட்ட வாகனங்களில் நாள்தோறும் அனுப்பி வருகின்றனா்.
கடந்தாண்டு ஒரு மூட்டை புதினா ரூ. 3 ஆயிரத்துக்கு விற்ற நிலையில், தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வரத்து அதிகரித்து, ஒரு மூட்டை புதினா ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், அறுவடைக்கூலி மற்றும் போக்குவரத்து செலவுக்கு கூட இல்லாததால், உத்தனப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமாா் 20 ஏக்கா் புதினா தோட்டத்தை விவசாயிகள் அழித்து வருகின்றனா்.