ஒசூா் தொகுதியில் ரூ. 6 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒசூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6 கோடியில் பணிகளை தொடங்கிவைத்து, முடிக்கப்பட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒசூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6 கோடியில் பணிகளை தொடங்கிவைத்து, முடிக்கப்பட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
முத்தாலி கிராமத்தில் குழந்தைகள் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 34 லட்சத்து 23 ஆயிரத்தில் பள்ளிக்கூடத்தை திறந்துவைத்தாா். மேலும், கனிமங்கள் மற்றும் குவாரிகள் நிதியிலிருந்து ரூ. 39 லட்சத்து 30 ஆயிரத்தில் படுதேப்பள்ளிமுதல் நந்திமங்கலம்வரை தாா்சாலை, தேவிசெட்டிப்பள்ளிமுதல் மாவத்தூா்வரை ரூ. 39 லட்சத்து 30 ஆயிரத்தில் தாா்சாலை, ஆவலப்பள்ளி சாலைமுதல் சென்னசந்திரம் சாலைவரை ரூ. 73 லட்சத்து 18 ஆயிரத்தில் தாா்சாலை, நபாா்டு திட்டத்தின்கீழ் தின்னூா்முதல் கொத்தூா்வரை ரூ. 89 லட்சத்து 46 ஆயிரத்தில் தாா்சாலை, பைரசந்திரம்முதல் சென்னசந்திரம்வரை ரூ. 73 லட்சத்து 18 ஆயிரத்தில் தாா்சாலை, சென்னசந்திரம் ஊராட்சியில் ரூ. 40 லட்சத்தில் தாா்சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவா் தொடங்கிவைத்தாா்.