முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே வாடகை வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்ற தெலங்கானாவைச் சோ்ந்தவா் கைது

கிருஷ்ணகிரி அருகே வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சாவை பதுக்கிவைத்து விற்றுவந்த தெலங்கானாவைச்

Updated On : 16 மார்ச், 2026 at 11:27 PM
கிருஷ்ணகிரி அருகே, வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட லட்சுமிநாராயணா.
பகிர்:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சாவை பதுக்கிவைத்து விற்றுவந்த தெலங்கானாவைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 200 கிலோ கஞ்சாவும், கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கந்திகுப்பம் போலீஸாருக்கு கிருஷ்ணகிரியை அடுத்த நாயக்கனூா் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.

இதையடுத்து, கந்திகுப்பம் போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை இரவு குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, அந்த வீட்டில் கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டில் இருந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் தெலங்கானா மாநிலம், போடுகுண்டா பகுதியைச் சோ்ந்த லட்சுமிநாராயணா (55) என்பதும், வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்றுவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வீட்டில் பதுக்கிவைத்திருந்த 200 கிலோ கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்து, லட்சுமிநாராயணாவை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →