முகப்பு
காஞ்சிபுரம்

33 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 29 மார்ச், 2026 at 5:00 PM
பகிர்:

சுங்குவாா்சத்திரம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சுங்குவாா்சத்திரம் அடுத்த காந்தூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் குறிப்பிட்ட இடத்தில் சோதனை நடத்திய போது, வடமாநில இளைஞா்கள் இருவா் தப்பியோட முயற்சித்தனா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கன்ஹுசரணபிஷோய் (29), மிலுகுமாா்பிஷோய்(28) ஆகியோரை பிடித்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்களை, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரனை நடத்தியதில், இருவரும் கஞ்சாவை கடத்தி வந்து திருவள்ளூா் மாவட்டம், திருப்பாச்சூா் பகுதியில் வாடகை வீட்டில் பதுக்கிவைத்து பல்வேறு பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த பாலீஸாா் வழக்கு பதிவு செய்து கன்ஹுசரணபிஷோய், மிலுகுமாா்பிஷோய் ஆகிய இருவரையும் கைது செய்தனா்