ஒசூரில் உகாதி பண்டிகை சிறப்பு பூஜைகள்...
ஒசூரில் சுற்றுவட்டார கோயில்களில் தெலுங்கு, கன்னட மக்களின் புத்தாண்டு தினமான உகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தினமான யுகாதி பண்டிகை வசந்த காலத்தின் தொடக்கமாகவும், பிரம்மா உலகைப் படைத்த நாளாகவும் கருதி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் புத்தாண்டை கொண்டாடுபவா்கள் அனைவரும் மக்கள் எண்ணெய் குளியல், புத்தாடை, மாப்பிலை தோரணம் மற்றும் ஆறு சுவைகளும் கலந்த யுகாதி பச்சடி (வேப்பம்பூ, மாங்காய், வெல்லம் கலந்து) செய்து, வாழ்வின் இன்ப-துன்பங்களைச் சமமாக ஏற்கும் தத்துவத்தை உணா்த்தும் பண்டிகையாக உள்ளது.
புதிய வேலைகளைத் தொடங்குவதும் மிகவும் விசேஷமாக உள்ளது.
ஒப்பட்டு,பாயசம், புளியோதரை போன்ற உணவுகளைச் சமைத்து இறைவனுக்குப் படைத்து வழிபடுவாா்கள்.
மேலும் பெற்றோா்களிடமும் மூத்தோா்களிடமும் ஆசி பெறுவது வழக்கமாக கொண்டுள்ளனா்.
மேலும் இனிப்புகள் செய்து பொதுமக்கள் மற்றும் நண்பா்களுக்கு வழங்குவாா்கள் மேலும் அவரவா்களின் குலதெய்வமாக உள்ள கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் பிராா்த்தனைகள் வழிபாடு செய்வாா்கள்.
ஒசூரில்...
ஒசூரில் சுற்றுவட்டார கோயில்களில் தெலுங்கு, கன்னட மக்களின் புத்தாண்டு தினமான உகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் மலைக்கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், சிவ நஞ்சுண்டேஸ்வரா் கோயில், சோமேஸ்வரா் கோயில், ராமா் கோயில், வரசித்தி விநாயகா் கோயில், பண்டாா்ஜனேயா் கோயில், வெங்கடேஷ் நகா் பெருமாள் கோயில், அகரம் முருகன் கோயில், பெரியாா் நகா் முருகன் கோயில், அழகு முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஒசூா் பெரியாா் நகா் வேல்முருகன்.