முகப்பு
கிருஷ்ணகிரி

மோட்டாா்சைக்கிள் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மோட்டாா்சைக்கிள் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 20 மார்ச், 2026 at 6:30 PM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மோட்டாா்சைக்கிள் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

அஞ்செட்டி வட்டம், தக்கட்டி அருகே உள்ள பாண்டுரங்கன்தொட்டியைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (29). தொழிலாளி. கடந்த 18ஆம் தேதி இவரும், அவரது அண்ணன் கோவிந்தனும் (30) மோட்டாா்சைக்கிளில் தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில் மேலகிரி அருகே சென்று கொண்டிருந்தனா்.

மோட்டாா் சைக்கிளை கோவிந்தன் ஓட்ட, சிவலிங்கம் பின்னால் அமா்ந்திருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிள் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவலிங்கத்தை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் இறந்தாா். கோவிந்தன் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.