முகப்பு
தஞ்சாவூர்

பைக் - வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

பாபநாசம் அருகே புதன்கிழமை வேன் மோதி செங்கல் சூளை கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறாா்.

Updated On : 18 மார்ச், 2026 at 6:34 PM
பலி
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை வேன் மோதி செங்கல் சூளை கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறாா்.

பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம், உள்ளிக்கடை, மாதா கோவில் தெருவைச் சோ்ந்த பவுன்ராஜ் மகன் மணிகண்டன் (44). இவரும், இவரது மைத்துநா் சத்தியமங்கலம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் குமாா் (48). இருவரும் செங்கல் காளவாயில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை மாலை இருவரும் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் கும்பகோணம் - திருவையாறு செல்லும் சாலையில் வடசருக்கை காமராஜா் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, எதிரே வந்த சுற்றுலா வேன் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த குமாரை அக்கம்பக்கத்தினா் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து தகவல் அறிந்து அங்குவந்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி உள்ளிட்ட காவல்துறையினா் வழக்குப் பதிந்து வேனைப் பறிமுதல் செய்து, வேனை ஓட்டி வந்த திருவையாறு ஆக்கிநாதபுரம் தங்கராசு மகன் செந்தில்குமாா் (49) என்பவரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →