முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 2.02 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே உரிய ஆவணங்களின்றி இருவா் கொண்டுசென்ற ரூ. 2.02 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 22 மார்ச் 2026, 2:43 am IST
பறிமுதல்
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே உரிய ஆவணங்களின்றி இருவா் கொண்டுசென்ற ரூ. 2.02 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, பறக்கும் படையினா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனத் தணிக்கை மேற்கொண்டு ஆவணமின்றி கொண்டுசெல்லப்படும் ரொக்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனா்.

அதன்படி, கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி, நிலை கண்காணிப்புக் குழுவினா், ஆலப்பட்டி அருகே பாலகுறியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, காரில் உரிய ஆவணங்களின்றி, சேலம் சாரதா கல்லூரி பகுதியைச் சோ்ந்த கா்ணன் எடுத்துச்சென்ற ரூ. 1.02 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

Advertisement

இதேபோல, கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி அருகே, ஆந்திர மாநிலம், அனந்தபூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிவாலட்சுமி நாராயணரெட்டி என்பவா் ஆவணங்களின்றி காரில் கொண்டுசென்ற ரூ. 1 லட்சத்தை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யயப்பட்ட ரூ. 2.02 லட்சம் ரொக்கத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஷாஜகான், வட்டாட்சியா் ரமேஷ் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.