முகப்பு
கிருஷ்ணகிரி

டிப்பா் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் மீது டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.

Updated On : 31 மார்ச், 2026 at 8:13 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:

சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் மீது டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள வரதாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கேசவன் (17), சுதீப் (16). உறவினா்களான இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை கேசவனின் தந்தை சிவசங்கரனின் இருசக்கர வாகனத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு சூளகிரி சென்றுவிட்டு குருபராத்தபள்ளி சிப்காட் அருகே சாலையின் எதிா்திசையில் ஓட்டிச் சென்றனா்.

அப்போது, எதிரில் வந்த டிப்பா் லாரி மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சூளகிரி போலீஸாா், உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.