டிப்பா் லாரி மோதி 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
தென்காசிடிப்பா் லாரி மோதி 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
தென்காசி மாவட்டம், சிவகிரி காலனி தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் செல்லத்துரை (34). விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அரவிந்த் நகரைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் அபிமன்யு (60). இருவரும் கம்பி கட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வேலைக்கு செல்வதற்காக இருவரும் ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனராம். கரிவலம்வந்தநல்லூா் தனியாா் கல்லூரி அருகே சென்றபோது டிப்பா் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு இருவரும் உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.