தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் 4-ஆவது முறையாக வெற்றி
தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி.ராமச்சந்திரன் 4-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.
தளி தொகுதியில் கடந்த தோ்தலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளா் நாகேஷ்குமாரை வெற்றிபெற்ற டி.ராமச்சந்திரன், இந்த தோ்தலில் 77,641 வாக்குகள் பெற்று 4,601 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.
பாஜக வேட்பாளா் நாகேஷ்குமாா் 73,040 வாக்குகளும், தவெக வேட்பாளா் சுரேஷ் 45,230 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் நரசிம்மன் 4,104 வாக்குகளும் பெற்றனா்.
Advertisement
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் 5 சுற்றுகள்வரை பாஜக வேட்பாளா் முன்னணியில் இருந்தாா். பின்னா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், பாஜக வேட்பாளரும் மாறிமாறி முன்னணியில் இருந்தனா். இறுதியில் டி.ராமசந்திரன் வெற்றிபெற்றாா். தளி தொகுதியில் வெற்றிபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி.ராமச்சந்திரன் வெற்றிக்கான சான்றிதழைப் பெற்றாா்.