நாமக்கல்

மளிகைக் கடைகளில் சுகாதார அலுவலர்கள் ஆய்வு

DIN

நாமக்கல் பகுதி மளிகைக் கடைகளில் அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ரமேஷ்குமார் மேற்பார்வையில் நாமக்கல் அருகே எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் செல்வம் தலைமையில் சுகாதாரத் துறை அலுவலர்கள் நாமக்கல், அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள மளிகைக் கடைகளில் அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது 10 கடைகளில் மாதிரி எடுத்து சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அயோடின் கலக்காத உப்பு பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அனைத்து மளிகைக் கடையினரும் அயோடின் கலந்த உப்புகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
சுகாதார ஆய்வாளர்கள் முகமது ரபீக், இளங்கோ, பெரியசாமி, ராஜகணபதி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT