நாமக்கல்

தாட்கோ மூலம் 1,000 பேருக்கு வாகன ஓட்டுநர் பயிற்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

DIN

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் 1,000 பேருக்கு தாட்கோ மூலம் இலவசமாக இலகு ரக, கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நாமக்கல் வள்ளிபுரம் அசோக் லேலண்ட் பயிற்சி நிறுவனத்தில் தாட்கோ உதவியுடன் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் பயிற்சியின் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்து இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி முகாமைத் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியது:
ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பல்வேறு திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
லாரி போக்குவரத்து, லாரி கூண்டு கட்டும் தொழிலில் மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டுவரும் நாமக்கல் மாவட்டத்தில் ஓட்டுநர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு, தமிழ்நாட்டில் எந்தவொரு மாவட்டத்திலும் இல்லாமல் நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பயனடையும் வகையில் 1,000 நபர்களுக்கு இலவச இலகுரக மற்றும் கனரக வாகனம் பயிற்சி அளிக்க அனுமதி கிடைத்துள்ளது. இலகுரக பயிற்சி 30 நாட்களுக்கும் கனரக வாகன பயிற்சி 45 நாட்களுக்கும் அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறுபவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகின்றது.
பயிற்சி முடிவுற்ற பின் தங்களுக்கு தாட்கோ மூலம் அனைத்து வகையான வாகனங்கள் வாங்குவதற்கும் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி பெற்றுதரப்படுகிறது.
இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி கையேட்டினை ஆட்சியர் வழங்கினார்.
அசோக் லேலண்ட் பயிற்சி நிறுவன துணை மேலாளர் வி.எஸ்.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். தாட்கோ மாவட்ட மேலாளர் ஆர்.மீனாகுமாரி, உதவி மேலாளர் எஸ்.சக்திவேல், அசோக் லேலண்ட் பயிற்சி நிறுவன பணியாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பெறும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர். அசோக் லேலண்ட் பயிற்சி நிறுவன முதுநிலை மேலாளர் ஜெ.சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT