நாமக்கல்

மணல் திருட்டு: லாரி, ஜேசிபி வாகனம் பறிமுதல், ஒருவர் கைது

தினமணி

பரமத்தி வேலூர் அருகே அரசு அனுமதியின்றி மணல் எடுத்து வந்த லாரி மற்றும் மணல் எடுப்பதற்கு பயன்படுத்திய ஜேசிபி வாகனத்தை பரமத்தி வேலூர் போலீஸார் பறிமுதல் செய்து, மணல் லாரி ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஜேசிபி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
 பரமத்தி வேலூர் அருகே உள்ள அணிச்சம்பாளையம் காவிரியாற்றில், அரசு அனுமதியின்றி மணல் திருடப்பட்டு வருவதாக பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸார் மணல் எடுத்து வந்த லாரியைப் பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், மூலிமங்கலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணியை (29) கைது செய்தனர். மேலும் மணல் எடுப்பதற்கு பயன்படுத்திய ஜேசிபி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ஜேசிபி ஓட்டுநர் வினோத்தை தேடி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT