முகப்பு
நாமக்கல்

குறுமைய அளவிலான அறிவியல் கண்காட்சி

குமாரபாளையத்தில் குறுமைய அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

குமாரபாளையத்தில் குறுமைய அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புத்தர் தெரு நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சிக்கு, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் வி.வாசுதேவன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியை தில்லைக்கரசி வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் ஏ.ரவிச்சந்திரன் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார். இதில், குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் உள்ள 9 அரசுப் பள்ளிகள் பங்கேற்றன.
வன மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள், போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு, பசுமைத் திட்டம், கணித மாதிரியாக்கம், மின் உற்பத்தி, உடல் நல பாதுகாப்பு, டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், கழிவுநீர் சுத்திகரித்தல், சாலைப் பாதுகாப்பு,  மூலிகை மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவ, மாணவியரின் படைப்புகள் இடம் பெற்றன.
வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மல்லிகேஸ்வரி, மஞ்சுளா, ஆசிரியை விசாலாட்சி ஆகியோர் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
ஒன்றுமுதல் ஐந்தாம் வகுப்புக்கான போட்டியில் ஜேகேகே நடராஜா நகர் நகராட்சி தொடக்கப் பள்ளி, புத்தர் தெரு நகராட்சி தொடக்கப் பள்ளி, நாராயண நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றன.
 6 முதல் 8-ஆம் வகுப்புக்கான போட்டியில் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி, புத்தர் தெரு நகராட்சி உயர்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் மூன்றிடங்களைப் பிடித்தன. சிறந்த பள்ளிகளாக ஜேகேகே நடராஜா நகர் பள்ளி, நாராயண நகர் நகராட்சிப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.  தேர்வு பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →