நாமக்கல்

பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் பூக்களின் விலை சரிவு

DIN

பரமத்தி வேலூர் தினசரி ஏலச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை சரிவடைந்ததால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர். பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.  கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி கிலோ ரூ.180-க்கும், அரளி கிலோ ரூ.120-க்கும், முல்லை (ஊசி மல்லி) கிலோ ரூ.850-க்கும்,செவ்வந்தி பூ கிலோ ரூ.150-க்கும், கோழிக்கொண்டை கிலோ ரூ.150-க்கும் ஏலம் போனது. திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.450-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.110-க்கும், முல்லை (ஊசி மல்லி) கிலோ ரூ.600-க்கும்,செவ்வந்தி பூ கிலோ ரூ.120-க்கும், கோழிக்கொண்டை கிலோ ரூ.100-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT