நாமக்கல்

பாவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைப்பந்து போட்டிகளில் சாதனை

DIN

கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான எம்.மகாலிங்கம் சுழற்கோப்பைக்கான கைப்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில் பாவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்தனர். இதேபோல், நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் கோப்பைக்கான கைப்பந்து போட்டியில் பாவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், பாவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் பாவை கல்லூரி மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றனர்.  அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி கடந்த அக்டோபர் மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பாவை கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பாவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தைப் பெற்று கோப்பையை வென்று சாதனைப் படைத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற பாவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடைபெறவுள்ள தெற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன்,தாளாளர் மங்கை நடராஜன்,  இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.இராமசாமி,  இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில்,பாவை பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.பிரேம்குமார்,உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT