நாமக்கல்

குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு: 80 பள்ளிகள் பங்கேற்பு

DIN

மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 80 பள்ளிகளைச் சேர்ந்த 113 மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க நாமக்கல் மாவட்ட கிளை, நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் 25-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கல்லூரித் தாளாளர் பொ. செல்வராஜ் தலைமை வகித்தார். செயலர் கவீத்ரா நந்தினி பாபு,   தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலக் கருத்தாளர் ஜெயமுருகன்  முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ந.ராஜவேல் வரவேற்றார். மாநிலச் செயலர் ஆ. தியாகராஜன், மாவட்ட துணைத் தலைவர் டி. திருநாவுக்கரசு  ஆகியோர் பேசினர். விஞ்ஞானி ஜி.எஸ். ஐயப்பனுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. இம்மாநாட்டில் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் 118 மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. 13 ஆய்வுகள் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்தெடுக்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் என்.சுரேந்தர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT