முகப்பு
நாமக்கல்

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை: ஆட்சியர் ஆய்வு

மல்லசமுத்திரம் ஊராட்சி கோட்டபாளையம் ஊராட்சிப் பகுதியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை

நாமக்கல்

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை: ஆட்சியர் ஆய்வு

மல்லசமுத்திரம் ஊராட்சி கோட்டபாளையம் ஊராட்சிப் பகுதியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

மல்லசமுத்திரம் ஊராட்சி கோட்டபாளையம் ஊராட்சிப் பகுதியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் குடியிருப்புப் பகுதிகளில் காய்ச்சல் தடுப்புக் குழுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், கொசு ஒழிப்புப் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதையும், கொசு மருந்து அடிக்கப்பட்டு வரும் பணியினையும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள தொட்டிகள் மற்றும் டிரம்களில் கொசுப் புழு வளராமல் தடுக்க அபேட்டு மருந்து தெளித்தல், சாலை ஓரங்கள், நீர் தேங்கும் பகுதிகளில் சுத்தம் செய்தல், பிளீச்சீங் பவுடர் போடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
 ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மாலதி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
 
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →