படைவீடு பள்ளியில் குழந்தைகள் தின விழா
குமாரபாளையத்தை அடுத்த படைவீடு அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தை அடுத்த படைவீடு அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் என்.பிரபாகர் தலைமை வகித்தார். ஈரோடு நடுநகர் ரோட்டரி சங்கத் தலைவர் கே.விஸ்வநாதன், மண்டல இயக்குநர் எல்.பி.மோகனசுந்தரம், முன்னாள் தலைவர்கள் சி.சுப்பிரமணியம், பி.எம்.பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குழந்தைகள் உரிமைகள், கடமைகள் மற்றும் உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணரும் கல்வி, நோயற்ற, சுகாதார வாழ்க்கை முறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, பேச்சு, கட்டுரை, ஓவியம், சதுரங்கம், வினாடி}வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி நூலகத்துக்கு ரூ.2,200 மதிப்புள்ள புத்தகங்களை ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
முன்னதாக, கொடுத்து மகிழ்தல் எனும் அடிப்படையில் மாணவ, மாணவியர் தங்களுக்குப் பிடித்தமான பொருள்களை, பிடித்தவர்களுக்கு வழங்கி, பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
டாடா கெமிக்கல்ஸ் முகவர் ஏ.மலைச்சாமி, உறுப்பினர்கள் வி.நல்லகுமாரசாமி, எம்.கே.கோபி, எஸ்.சிவநேசன், உதவித் தலைமையாசிரியர் பி.வாசுதேவன், ஆசிரியைகள் கா.கலைமகள், ச.நாகரத்தினம், ஐ.அனந்தநாயகி, த.நிர்மலா, ம.பிரியங்கா, கா.சர்மிளாதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.