நாமக்கல்

நாமகிரிப்பேட்டையில் வளர்ச்சி திட்டப்பணி: ஆட்சியர் ஆய்வு 

தினமணி

சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, பட்டணம், இரா.புதுப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் அண்மையில் நேரில் ஆய்வு செய்தார்.
 சீராப்பள்ளி பேரூராட்சி வார்டு 14 இல் கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும், வார்டு 8 இல் ஒடுவன்குறிச்சி பிற்பட்டோர் காலனி பகுதியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டு தனி நபர் வீட்டையும் அவர் பார்வையிட்டார். சீராப்பள்ளி பேரூராட்சி வார்டு 3 இல் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட பணி, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி வார்டு 6 இல் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 2 கி.மீ தொலைவுக்கு தார் சாலை அமைக்கும் பணியையும், இரா.புதுப்பட்டி பேரூராட்சியில் தேர்நிலை முதல் சடக்கன் தோட்டம் வரை ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்ட பணி, பட்டணம் பேரூராட்சி வார்டு 3 இல் ரூ. 2.10 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும் ஆட்சியர் பார்வையிட்டார். இதுபோல பட்டணம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை வளாகம் உள்ளிட்ட பணிகளை அவர் பார்வையிட்டார். ஆய்வின் போது பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் என்.எம்.முருகன், உதவி செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி, செயல் அலுவலர்கள் சதீஷ்குமார் (பட்டணம்), மல்லிகை சுந்தரம் (நாமகிரிப்பேட்டை), உமா ராணி (சீராப்பள்ளி), கிருஷ்ணவேணி (இரா.புதுப்பட்டி) உட்பட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT