முகப்பு
நாமக்கல்

சித்ரா பெளர்ணமி கிரிவலம்

சித்ரா பெளர்ணமியையொட்டி, திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலைச் சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சித்ரா பெளர்ணமியையொட்டி, திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலைச் சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலையின் சுற்றுவட்டார மலைப் பாதை 5 கிலோ மீட்டராகும். சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மலைப் படியின் முதல் படியில் தொட்டு வணங்கி விட்டு பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் சென்றனர். கிரிவலத்தின்போது பக்தர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆன்மிக அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆன்மிக அன்பர்கள் தேவாரம், திருவாசகப் பாடல்களை மனமுருகி பாடியவாறு கிரிவலம் சென்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →