நாமக்கல்

சவுளுப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN


காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி ஊராட்சி கீழ்சவுளுப்பட்டியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவானது கடந்த 12-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. 13-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கலச ஆராதனை, பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகாசாந்தி ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்றது. காலை 9 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு, தொடர்ந்து விநாயகர், மாரியம்மன் மற்றும் சுவாமிகளுக்கும், கோபுர கலசங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது . காலை 10 மணிக்கு சுவாமிகளுக்கு விசேஷ அபிஷேக அலங்காரம், தச தரிசனம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT