நாமக்கல்

ராசிபுரம் பகுதியில் வருமான வரித் துறையினர் சோதனை

தினமணி

ராசிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
 ராசிபுரம் அருகே நாமக்கல்-தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக இரு திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. சுமார் ரூ.30 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபங்களுக்கு ராசிபுரம், சேலம், நாமகிரிப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் பங்குதாரர்களாக உள்ளனர்.
 இந்த நிலையில், வருமான வரித் துறையினர் திருமண மண்டப உரிமையாளர்களின் வீடுகளில் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இதில் பங்குதாரர்களாக உள்ளோர் வீடுகள், வணிக நிறுவனங்களில் இச்சோதனை நடத்தியதாகத் தெரிகிறது. இதில் வருமான வரித் துறையினர் பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் நள்ளிரவு வரை சோதனை தொடர்ந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT