நாமக்கல்

வெண்ணந்தூர் வழியாக பவானிக்கு புதிய பேருந்து இயக்க காங்கிரஸ் கோரிக்கை

DIN

ராசிபுரத்திலிருந்து வெண்ணந்தூர் வழியாக பவானிக்கு புதிய பேருந்து இயக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நகரத் தலைவர் கே. சிங்காரம் தலைமையில் வெண்ணந்தூரில் அண்மையில் நடைபெற்றது.
துணைத் தலைவர்கள் கே. தங்கமுத்து, வி. காசிபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் எம்.ஏ. வெங்கடாஜலம் வரவேற்றார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கடந்த 8 மாதங்களாக பல அடுக்கு வரி விதிப்பால் விசைத்தறி நெசவாளர்கள் பெரிய பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். வரி விதிப்பால், தொழில் செய்வோர்கள் படும் வேதனையை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.
பல அடுக்கு வரி விதிப்பை ரத்து செய்துவிட்டு நூலுக்கு மட்டும் வரி என்ற நிலையை உருவாக்க வேண்டும். மத்திய அரசு, உடனடியாக, காவிரி மேலாண் வாரியத்தை அமைக்க வேண்டும்.
வெண்ணந்தூர் பேரூராட்சியில் உள்ள 5 மற்றும் 15-ஆவது வார்டுகள் பெரிய அளவில் உள்ளது. இந்த இரு வார்டுகளை மட்டும் நான்கு வார்டுகளாக உருவாக்கி, மறு வரையறை செய்ய வேண்டும்.
 வெண்ணந்தூர், அத்தனூர், ஆட்டையாம்பட்டி பகுதி மக்களின் நலனை கருதி  ராசிபுரத்தில் இருந்து வெண்ணந்தூர் வழியாக பவானிக்கு புதிய பேருந்து இயக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT