நாமக்கல்

விவேகானந்தர் பிறந்த தினம்

DIN

ராசிபுரம் அருகேயுள்ள ஒ.சௌதாபுரம் பகுதியில் கோவை ராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவர்கள் சங்கம் நாமக்கல் கிளை சார்பில் விவேகானந்தர் பிறந்த தினவிழா மற்றும் இளைஞர் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.  இதனையடுத்து,  அங்கு நூலகம் முன்பாக உள்ள விவேகானந்தர் சிலைக்கு விவேகானந்தர் அறக்கட்டளை நிர்வாகி விக்னேஷ் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இளைஞர் தின உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர்,  அரசு உயர் நிலைப் பள்ளியில் விவேகானந்தர் தொடர்பான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு,  மாணவ,  மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.   இவ் விழாவுக்கான ஏற்பாடுகளை இராமகிருஷ்ண மிஷன் முன்னாள் மாணவர் சங்க இணைச் செயலர் கே.அருணாசலம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT