காவல்துறை அலுவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி
நாமக்கல் மாவட்ட காவல்துறை அலுவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட காவல்துறை அலுவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
ஓய்வுபெற்ற மாவட்ட தலைமை நீதிபதி சின்னப்பன் பங்கேற்று, வழக்குப் பதிவு செய்வது, புலன் விசாரணை மேற்கொள்வது, சாட்சியங்களை சேகரிப்பது மற்றும் ஒவ்வொரு வழக்கிலும் இறுதி அறிக்கை தயாரித்து நீதிமன்றத்திற்கு அனுப்புவது குறித்த விவரங்களை தெரிவித்தார். மேலும் காவல் அலுவலர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி தெளிவுபடுத்தினார்.
பயிற்சி வகுப்பில் காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ். செந்தில் ஆகியோர் பேசினர். பயிற்சி காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரையிலும், மாலை 2.30 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து நீதிமன்ற காவலர்கள் என மொத்தம் 72 பேர் பங்கேற்றனர்.