நாமக்கல்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தினமணி

ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூர் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 வடகரையாத்தூர், இந்திராநகர், ஜேடர்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு திடுமல் கால்நடை மருத்துவமனையின் உதவி கால்நடை மருத்துவர் சையது அஸ்லாம் தலைமையிலான குழுவினர் தடுப்பூசி போட்டனர்.
 இதையடுத்து, கோமாரி நோய் கால்நடைகளை தாக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் விவசாயிகளிடம் எடுத்துக் கூறப்பட்டது. மார்ச் 21-ஆம் தேதி வரை நடைபெறும் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT