நாமக்கல்

ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக். பள்ளி 100 சதம் தேர்ச்சி

DIN

ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி எஸ்எஸ்எல்சி., தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப் பள்ளி 500-க்கு 495 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளது.
இப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியரில் 139 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5 பேர் 500-க்கு 490 மதிப்பெண்களுக்கு மேலும், 38 பேர் 450-க்கு மேலும், 78 பேர் 400-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் ஒருவரும், சமூக அறிவியலில் 4 பேர் என மொத்தம் 5 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்றவர்களை பள்ளித் தலைவர் கே.குமாரசாமி, செயலர் எஸ்.சந்திரசேகர், பொருளாளர் வி.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், சி.நடராஜூ, இணைச்செயலர் வி.ராமதாஸ், வி.ராமசாமி, இயக்குநர்கள் டாக்டர் ஆர்.எம்.கிருஷ்ணன், வி.சுந்தரராஜன், என்.மாணிக்கம், வி.சி.சேகர், ஆர்.பெத்தண்ணன், எஸ்.கே.ஏ.முருகேசன், முதல்வர் பி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டி நினைவுப் பரிசளித்தனர்.
எஸ்ஆர்வி மகளிர் மற்றும் ஹைடெக் பள்ளி: ராசிபுரம் எஸ்ஆர்வி மகளிர் மற்றும் ஹைடெக் பள்ளியின் மாணவ, மாணவியர் 18 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப் பள்ளியில் அறிவியல் பாடத்தில் ஒருவரும், சமூக அறிவியல் பாடத்தில் 17 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். 490 -க்கு மேல் மூவரும், 480-க்கு மேல் 26 பேரும், 470-க்கு மேல் 52 பேரும், 460-க்கு மேல் 78 பேரும், 450-க்கு மேல் 102 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்றவர்களை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.
பாச்சல் அரசுப் பள்ளி: பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப் பள்ளி 500-க்கு 491 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT