நாமக்கல்

இந்திரா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

DIN

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக்நவீத் தலைமை வகித்தார். இதில், அலங்கரிக்கப்பட்ட இந்திரா காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதோடு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் மாணிக்கம், விவசாய அணி மாவட்டத் தலைவர் பாலமுரளி, மகளிரணி மாவட்ட துணைத் தலைவி பரிமளா, மாவட்டச் செயலர் மகேஸ்வரி, வட்டாரத் தலைவர்கள் கொல்லிமலை குப்புசாமி, புதுச்சத்திரம் இளங்கோ, நகர செயலர் தாமு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சோடா ராஜேந்திரன், சேந்தமங்கலம் வட்டாரச் செயலர் ரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
நாமக்கல் நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் இரா.செழியன், வீ.பி.வீரப்பன், நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஏ.சித்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குமாரபாளையத்தில்...
குமாரபாளையத்தில் நகரத் தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணித் தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்டத்  தலைவர் தனகோபால் பங்கேற்று, கட்சிக் கொடியேற்றினார்.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட இந்திரா காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 
இந்நிகழ்ச்சியில், கட்சியின் நிர்வாகிகள் சுப்பிரமணி, சிவராஜ், சிவகுமார், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  தொடர்ந்து, இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

வரப்பெற்றோம் (05-06-2024)

கங்குவா அப்டேட் வருமா? வராதா? புலம்பும் சூர்யா ரசிகர்கள்!

SCROLL FOR NEXT