நாமக்கல்

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.11 கோடி வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

DIN


சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டமநாய்க்கன்பட்டி, அக்கியம்பட்டி, பொம்மசமுத்திரம், வாழவந்திகோம்பை, பெரியகுளம் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சி.மாலதி, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மா.பத்மநாபன், எஸ்.எ.சேகர் உள்பட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT