நாமக்கல்

எஸ்எஸ்எம் பாலிடெக்னிக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

DIN


குமாரபாளையம் எஸ்எஸ்எம் பாலிடெக்னிக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி மற்றும் செயல்விளக்கப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாட்டு நலப்பணித்திட்டம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இணைந்து நடத்திய பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான இம் முகாமுக்கு கல்லூரித் தலைவர் எஸ்எஸ்எம்.பி.இளங்கோ தலைமை வகித்தார். முதல்வர் (பொ) ஜி.கே.பாலமுருகன் வரவேற்றார். துணைத் தலைவர் பி.இ.ஈஸ்வர், தாளாளர் பி.இ.புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர்.
குமாரபாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய அலுவலர் ஆர்.நல்லதுரை, பேரிடர் மேலாண்மை குறித்துப் பேசினார். பெரு வெள்ளம், தீ விபத்து, நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடரில் பாதிக்கப்பட்டோரை மீட்கும் வழிமுறைகள் குறித்து தீயணைப்புப் படையினர் செயல் விளக்கம் அளித்தனர்.
கல்லூரி விரிவுரையாளர் ஆர். தனசேகர், பேரிடர் மீட்கப்படுவோருக்கு அளிக்கப்பட வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்து விளக்கிப் பேசினார். கல்லூரி நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பி. முருகவேல், எம். மணிராஜ் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT