நாமக்கல்

மகளிருக்கு வீட்டு உபயோக பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

DIN

ராசிபுரம் வாசவி வனிதா கிளப் சார்பில் மகளிருக்கான வீட்டு உபயோக ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
ராசிபுரம் வாசவி திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் வனிதா மகளிர் கிளப் தலைவர் ஜி.காயத்திரி தலைமை வகித்தார். செயலர் எஸ்.யசோதா வரவேற்றார். இந்தப் பயிற்சி முகாமில் வாசவி கிளப் மண்டலத் தலைவர் பி.வி.ராஜசேகரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, துவக்கி வைத்துப் பேசினார்.  இதில், இயற்கை உடல் சோப்பு, பாத்திரம் தேய்க்கும் பொடி, இயற்கை வாசனை திரவியங்கள், குங்குமம், கண் மை, நாப்கின், சலவை தூள், பல் பொடி, இயற்கை முடி எண்ணெய், கொசு விரட்டி போன்றவை தயாரிப்பது குறித்த செயல்முறை பயிற்சியளிக்கப்பட்டது.  இந்தப் பயிற்சியாளர்கள் தாரணி, ஜிஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று செயல்விளக்கப் பயிற்சியளித்தனர்.  இதில் திரளான பெண்கள் பங்கேற்றுப் பயிற்சி பெற்றனர். இதில் வனிதா கிளப் பொருளாளர் சி.புஷ்பலதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT