நாமக்கல்

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை

DIN

7-ஆவது ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில உயர்நிலைக் குழு கூட்டம், மாநிலத் தலைவர் சண்முகராஜன் தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநில பொதுச்செயலர் தண்டபாணி, மாவட்டத் தலைவர் நவலடி ஆகியோர் பேசினர்.  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். 21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைந்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 
ஊதியக்குழு ஒரு நபர் குழுவின் தலைவர் ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தன் அறிக்கையை விரைந்து அளிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் அக்டோபர் 4-ஆம் தேதி நடத்தும் சிறு விடுப்புப் போராட்டம், நவம்பர் 27-ஆம் தேதி  நடத்தும் காலவரையற்ற போராட்டங்களில், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் கலந்து கொள்ளாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT