நாமக்கல்

"கோழித் தீவனமாக கோதுமை'

DIN

மக்காச்சோளம் விலை அதிகமாகவுள்ளதால், பண்ணைகளில் கோழித்தீவனமாக கோதுமையை பயன்படுத்தலாம் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால்,  கோழிகளில் வெப்ப அயற்சியும்,  வெப்ப அதிர்ச்சியும் காணப்படும். கோழிகளுக்கான தீவனத்தில் எலக்ட்ரோலைட்,  வைட்டமின் சி அமினோ அமிலங்கள் மற்றும் தாவர எண்ணெய் சேர்க்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மக்காச்சோளத்தின் விலை அதிகரித்துள்ளதால்,  அதற்கு மாற்றாக கோதுமையை தீவனமாக இடலாம். வழக்கம்போல் கோடைகால மேலாண்மை முறைகளை தவறாது பண்ணையாளர்கள் கையாள வேண்டும். வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க நீர்தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT