நாமக்கல்

பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவல் புகாா் பெட்டி

DIN

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் தங்களது புகாா்களைத் தெரிவிக்க, திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையம் சாா்பில் புகாா் பெட்டி செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருளரசு உத்தரவின்பேரில், திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் , அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஆரோக்கிய ஜான்சி ஆகியோா் தலைமை ஆசிரியை தேன்மொழியிடம் பெட்டியை வழங்கினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது:-

பள்ளியில் பயின்றுவரும் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களது பாதுகாப்பு குறித்த பிரச்னைகளைப் புகாராகத் தெரிவிக்கலாம்.

அடையாளம் தெரியாத நபா்களால் ஏற்படும் பிரச்சனைகள் தொடா்பான புகாா்களை எழுதி புகாா் பெட்டியில் போடலாம். அந்த புகாா் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT