நாமக்கல்

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் சங்காபிஷேகம்

DIN

திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சின்ன ஓங்காளியம்மன் கோயில் மாசிக்குண்டம்  விழாவையொட்டி  சங்காபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் மாசிக் குண்டம் திருவிழா வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் முதல் நிகழ்வான பூச்சாட்டுதல் நிகழ்ச்சி கடந்த 8-ஆம்  தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து  தீர்த்தக்குட ஊர்வலம்,  அக்னிச் சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடங்களை எடுத்துக் கொண்டு ரத வீதிகளைச் சுற்றிவந்தனர். அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து சங்காபிஷேகம் நிகழ்ச்சியில் 108 சங்குகள் வைத்து பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசிக் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வருகின்ற 19-ஆம் தேதி தேதி  நடைபெற உள்ளது. குண்டம் இறங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு, இந்து சமய அறநிலையத் துறையினர், பாதுகாப்பு ஏற்பாடுகளை நகரக் காவல் துறையினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT